< Back
மாநில செய்திகள்
கனமழை எதிரொலி - காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

கோப்புப்படம்

மாநில செய்திகள்

கனமழை எதிரொலி - காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

தினத்தந்தி
|
8 Jan 2024 10:11 PM IST

தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

காரைக்கால்,

தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்தமிழகம், வட தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், நாளை (ஜனவரி 9-ம் தேதி) தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளித்து காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் அறிவித்துள்ளார். அதன்படி காரைக்கால் மாவட்டத்தில் இயங்கும் தனியார், அரசு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்