< Back
மாநில செய்திகள்
கனமழை எதிரொலி: அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

கனமழை எதிரொலி: அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

தினத்தந்தி
|
3 Dec 2023 7:00 AM IST

தள்ளிவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

சென்னை,

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து அந்த பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் (திங்கட்கிழமை) நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி நிறுவனத்தின் செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைக்கப்படுகிறது. அதேபோல், நாளை (திங்கட்கிழமை) நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் என்ஜினீயரிங் கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் தள்ளிவைக்கப்படுகிறது. தள்ளிவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல் சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு உதவிப்பெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளில் நாளை (திங்கட்கிழமை) நடைபெறும் செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்