< Back
மாநில செய்திகள்
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்
மாநில செய்திகள்

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்

தினத்தந்தி
|
8 Jan 2024 9:11 AM GMT

அவசரகால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுரையின் பேரில், கனமழையின் காரணமாக பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்விவரம் பின்வருமாறு:-

* கனமழையினை திறம்பட எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

* அனைத்து அடிப்படை வசதிகளுடன் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

* தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற மின் மோட்டார்கள், ஜேசிபி இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

* முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில், நாகப்பட்டினம் மற்றும் கீழ்வேளூர் ஆகிய 2 வட்டங்களிலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும், விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

* திருவண்ணாமலை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, அரியலூர், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

* அணைகளிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படும் போது, பொதுமக்களுக்கு முன் கூட்டியே தகவல் தெரிவித்து, வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி அணைகளிலிருந்து உபரி நீரை வெளியேற்ற நீர் வள ஆதாரத்துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

* பொதுமக்கள் தங்கள் புகார்களை பதிவு செய்து தீர்வு காணும் வகையில், மாநில மற்றும் மாவட்ட அவசரக்கால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் கூடுதலான அலுவலர்களுடன் செயல்பட்டு வருகிறது.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் இன்று மாநில அவசரக்கால செயல்பாட்டு மையத்தில், கனமழையினை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, நிவாரணப் பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்