< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
நெல்லையை புரட்டிய தொடர்மழை - வீடுகளை சூழ்ந்த மழைநீர்
|20 Nov 2023 2:35 AM IST
மழை நீரை வடியவைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
நெல்லை,
நெல்லை மாவட்டம் உவரி அருகே தொடர் மழை காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் சிரமம் அடைந்த மக்கள், மண்வெட்டி மற்றும் கடப்பாரை கொண்டு மழை நீரை வடியவைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
குட்டம் ஊராட்சிக்குட்பட்ட கூடுதாழை கடற்கரை கிராமத்தில் தொடர் மழை காரணமாக குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்தது. மழை நீரை வடியவைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.