< Back
மாநில செய்திகள்
தொடர் கனமழை: பிராட்வேயில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு
மாநில செய்திகள்

தொடர் கனமழை: பிராட்வேயில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

தினத்தந்தி
|
4 Dec 2023 1:41 PM IST

கனமழை பெய்த நிலையில் பிரகாசம் சாலையில் நடந்து சென்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

சென்னை,

'மிக்ஜம்' புயல் எதிரொலியாக சென்னையில் இரவு தொடங்கிய கனமழை, தற்போது வரை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரால், அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அத்துடன் முக்கிய சாலைகளிலும் மழைநீர் சூழ்ந்துள்ளது.

இந்த நிலையில், சென்னை பிராட்வேயில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரகாசம் சாலையில் நடந்து சென்றபோது திடீரென மின்சாரம் தாக்கி பத்மநாதன் என்பவர் உயிரிழந்தார். உயிரிழந்த பத்மநாதன் உடலை மீட்டு அப்பகுதி மக்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பத்மநாதன் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் பிராட்வேயில் தையல் தொழிலில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்