< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்
|28 May 2023 2:37 PM IST
நீலகிரி, கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கோடை வெப்பம் மக்கள் வாட்டி வதைக்கிறது. பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரியை தாண்டி பதிவாகி வருகிறது. அதே சமயம் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலான மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, சேலம், நாமக்கல், திருச்சி மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.