< Back
மாநில செய்திகள்
தமிழகத்தில் 31-ந் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

கோப்புப்படம்

மாநில செய்திகள்

தமிழகத்தில் 31-ந் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

தினத்தந்தி
|
28 Oct 2023 5:45 AM IST

நாளை, நாளை மறுநாள் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று. வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஒரு சில இடங்களிலும், நாளை மற்றும் நாளை மறுநாள் அநேக இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதைத் தொடர்ந்து வருகிற 31-ந் தேதி மற்றும் நவம்பர் 1, 2-ந் தேதிகளிலும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை.

இதுதவிர கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, நீலகிரி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொறுத்தவரை இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்