< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னை புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை
|25 May 2023 6:18 PM IST
சென்னை புறநகர் பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்தது.
சென்னை
கடந்த 2 மாதங்களாக கோடை வெயில் வாட்டி வதைத்தது. வீசிய காற்று அனலாக தெறித்தது. மக்கள் கடுமையான துயரங்களை அனுபவித்தனர். இந்தநிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்நிலையில், சென்னை புறநகர் பகுதிகளான பல்லாவரம், தாம்பரம், மேடவாக்கம், பெருங்களத்தூர்,பள்ளிக்கரணை, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் உள்ளிட்ட சென்னையின் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. காலையில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மாலை நேரத்தில் பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உருவானது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். வெளுத்து வாங்கிய கனமழையால் சாலையில் வெள்ளம் ஆறாக ஓடியது. மேலும் சேலம் மாவட்டம் எடப்பாடி சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை பெய்தது.