< Back
மாநில செய்திகள்
கனமழை... தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..?

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

கனமழை... தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..?

தினத்தந்தி
|
2 Feb 2023 7:52 AM IST

கனமழை காரனமாக 3 டெல்டா மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

நாகை,

தென்கிழக்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

அதன்படி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவித்துள்ளார்.

அதைபோல திருவாரூர் மாவட்டத்திலும் காலையில் இருந்தே மழை பெய்து வருகிறது. இதனால் திருவாரூரில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (வியாழக்கிழமை) விடுமுறை அளித்து மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் அறிவித்துள்ளார்.

இதேபோல, மயிலாடுதுறை மாவட்டத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அங்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

மேலும் செய்திகள்