< Back
மாநில செய்திகள்
விழுப்புரத்தில் பலத்த மழை
விழுப்புரம்
மாநில செய்திகள்

விழுப்புரத்தில் பலத்த மழை

தினத்தந்தி
|
26 Dec 2022 12:15 AM IST

விழுப்புரத்தில் பலத்த மழை பெய்தது.



கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் மழை பெய்தது. மாவட்டத்தின் தலைநகரான கள்ளக்குறிச்சியில் நேற்று காலை வானம் மேகமூட்டத்துடன் இருள் சூழ்ந்து மழைபெய்வதற்கான அறிகுறிகள் காணப்பட்டது. பின்னர் காலை 11 மணிக்கு மழைபெய்ய தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் பலத்த மழையாக கொட்டியது. பின்னர் மாலை 6 மணிவரை விட்டு விட்டு மழைபெய்தது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் வழிந்தோடிய மழைநீர் தாழ்வான பகுதிகளில் குளம்போல் தேங்கியது.

சங்கராபுரத்தில் நேற்று காலை முதல் மாலை வரை வானம் மேகமூட்டத்துடன் எகாணப்பட்டது. இந்த நிலையில் பிற்பகல் ஒரு மணி முதல் சாரல் மழை பெய்து வருகின்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதேபோல் தியாகதுருகம், சின்னசேலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்தது.

இதேபோன்று விழுப்புரம் மாவட்டத்திலும் நேற்று பரவலாக மழை பெய்தது. மேல்மலையனூர் பகுதியில் நேற்று அதிகாலை 5.30 மணி முதல் சாரல் மழை விட்டுவிட்டு பெய்து கொண்டே இருந்தது.

தற்போது மேல்மருவத்தூருக்கு விரதம் இருந்து செல்லும் பக்தர்கள், வழியில் உள்ள மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கும் வந்து செல்கின்றனர். இதற்காக அவர்களது வாகனங்கள் மந்தைவெளிப்பகுதியில் நிறுத்தப்படுகிறது. அந்த வகையில் நேற்று அந்த பகுதியில் நிறுத்தப்பட்ட வாகனங்களில் இருந்து இறங்கிய பக்தர்கள் சுமார் ½ கி.மீ தூரத்துக்கு மழையில் நனைந்தபடி நடந்து சென்று அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.

மேலும் செய்திகள்