< Back
மாநில செய்திகள்
நெல்லையில் கொட்டித் தீர்த்த கனமழை - பால்வளத்துறை அலுலகத்திற்குள் மழைநீர் புகுந்ததால் கணிணி, ஆவணங்கள் சேதம்
மாநில செய்திகள்

நெல்லையில் கொட்டித் தீர்த்த கனமழை - பால்வளத்துறை அலுலகத்திற்குள் மழைநீர் புகுந்ததால் கணிணி, ஆவணங்கள் சேதம்

தினத்தந்தி
|
26 April 2023 11:27 AM GMT

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் பால்வளத்துறை அலுவலகத்திற்குள் மழை நீர் புகுந்தது.

நெல்லை,

தமிழகம் முழுவதும் தற்போது கோடை வெயில் வாட்டி எடுத்து வரும் நிலையில், நெல்லை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பிற்பகல் நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

இதனிடையே கிழக்கு பருவக்காற்று காரணமாக தமிழகம் முழுவதும் சில இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன்படி நெல்லை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று சுமார் 1 மணி நேரம் கனமழை கொட்டித் தீர்த்தது.

இதனால் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் பால்வளத்துறை அலுவலகத்திற்குள் மழை நீர் புகுந்தது. இதன் காரணமாக அலுவலகத்தில் இருந்த கணிணிகள், ஆவணங்கள் உள்ளிட்டவை சேதமடைந்தன. மழைநீர் வெளியே செல்ல முடியாமல் அங்கேயே தேங்கி நின்ற நிலையில், தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து மோட்டார் பம்புகள் மூலம் நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.


மேலும் செய்திகள்