< Back
மாநில செய்திகள்
வத்திராயிருப்பு பகுதியில் பலத்த மழை
விருதுநகர்
மாநில செய்திகள்

வத்திராயிருப்பு பகுதியில் பலத்த மழை

தினத்தந்தி
|
8 Oct 2023 12:50 AM IST

வத்திராயிருப்பு பகுதியில் பலத்த மழை பெய்தது.

வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இந்தநிலையில் நேற்று மாலை மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. தற்போது வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் முதல் போக நெல் நடவு பணியினை விவசாயிகள் தொடங்கி உள்ளதால் இந்த மழை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என மகிழ்ச்சியுடன் கூறினர்.

மேலும் செய்திகள்