< Back
மாநில செய்திகள்
தஞ்சையில் வெளுத்து வாங்கிய கன மழை; 85 மில்லி மீட்டர் கொட்டித்தீர்த்தது  6 குடிசை வீடுகள் இடிந்து சேதம்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

தஞ்சையில் வெளுத்து வாங்கிய கன மழை; 85 மில்லி மீட்டர் கொட்டித்தீர்த்தது 6 குடிசை வீடுகள் இடிந்து சேதம்

தினத்தந்தி
|
14 Dec 2022 1:05 AM IST

தஞ்சையில், நேற்று மழை வெளுத்து வாங்கியது. 85 மில்லி மீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. மழைக்கு 6 குடிசை வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன.

தஞ்சையில், நேற்று மழை வெளுத்து வாங்கியது. 85 மில்லி மீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. மழைக்கு 6 குடிசை வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன.

கொட்டி தீர்த்த மழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோர் மாதம் தொடங்கி பெய்து வருகிறது. தொடக்க காலத்தில் மழை ஒருவாரம் கொட்டித்தீர்த்தது. அதன் பின்னர் அவ்வப்போது விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக 2 நாட்கள் மழை பெய்தது.அதன் பின்னர் மழை இன்றி காணப்பட்ட நிலையில் மீண்டும் கடந்த 2 நாட்களாக மழை கொட்டி வருகிறது. நேற்று முன்தினம் தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் தஞ்சையில் பலத்த மழை கொட்டியது.

தண்ணீர் தேங்கியது

அரைமணி நேரத்திற்கும் மேல் இடைவிடாது பலத்த மழை கொட்டியது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அதன் பின்னரும் விட்டு, விட்டு அவ்வப்போது வெயில் அடிப்பதும், மழை பெய்வதுமாக இருந்தது. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

இந்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி காணப்பட்டது. புறநகர் பகுதிகளிலும், விஸ்தரிப்பு பகுதிகளிலும் உள்ள வீடுகளை சுற்றிலும் தண்ணீர் தேங்கி காணப்பட்டது. தஞ்சையில் அதிக பட்சமாக 85 மில்லி மீட்டர் மழை கொட்டியது. தஞ்சை மாவட்டத்தில் மழையின் காரணமாக 6 குடிசை வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன.

மழை அளவு

தஞ்சை மாவட்டத்தில் நேற்று காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

தஞ்சை-85, வல்லம்-44, கும்பகோணம்-44, அய்யம்பேட்டை-41, குருங்குளம்-28, பாபநாசம்-26, வெட்டிக்காடு-21, அணைக்கரை-13, மஞ்சளாறு-8, அதிராம்பட்டினம்-8, பட்டுக்கோட்டை-7, நெய்வாசல் தென்பாதி-7, ஒரத்தநாடு-5, மதுக்கூர்-5, திருக்காட்டுப்பள்ளி-4, திருவிடைமருதூர்-3, பூதலூர்-1.

மேலும் செய்திகள்