< Back
மாநில செய்திகள்

பெரம்பலூர்
மாநில செய்திகள்
பெரம்பலூரில் பலத்த மழை

26 Sept 2023 12:56 AM IST
பெரம்பலூரில் பலத்த மழை பெய்தது.
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று மாவட்டத்தில் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில் இரவு 9 மணியளவில் திடீரென்று இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. மழை நீர் சாலையில் வெள்ளம்போல் கரைபுரண்டு ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியது. மழை பெய்ததால் இரவில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.