< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரியில் கனமழை: திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு
மாநில செய்திகள்

கன்னியாகுமரியில் கனமழை: திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு

தினத்தந்தி
|
13 Oct 2023 3:35 PM IST

கன்னியாகுமரியில் கனமழை காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்கள் தொடர்ச்சியாக கனமழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

இதனிடையே, திருவட்டார் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை காரணமாக திற்பரப்பு அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்