< Back
மாநில செய்திகள்
குமரியில் வெளுத்துவாங்கும் கனமழை.. விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து நிறுத்தம்
மாநில செய்திகள்

குமரியில் வெளுத்துவாங்கும் கனமழை.. விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து நிறுத்தம்

தினத்தந்தி
|
17 Dec 2023 5:16 AM GMT

கன்னியாகுமரியில் பெய்துவரும் தொடர் கனமழையால் சுற்றுலாப்பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

சென்னை,

தென்இலங்கை கடற்கரை பகுதியை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது.

குறிப்பாக நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று இரவு தொடங்கிய கனமழை, தற்போது வரை நீடித்து வருகிறது. தொடர்ந்து பெய்துவரும் கனமழையால், சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.

இதற்கிடையில், குமரியில் கனமழை தொடர்ந்து பெய்துவருவதால், சுற்றுலாத்தலமான விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு இயக்கப்படும் படகு போக்குவரத்து ரத்துசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை படகு போக்குவரத்து ரத்துசெய்யப்படுவதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. கனமழையால் சுற்றுலாப்பயணிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மேலும் செய்திகள்