< Back
மாநில செய்திகள்
குமரியில் அணைப்பகுதிகளில் கன மழை பேச்சிப்பாறையில் ஒரு மணி நேரத்தில் 58 மி.மீ. பதிவு
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

குமரியில் அணைப்பகுதிகளில் கன மழை பேச்சிப்பாறையில் ஒரு மணி நேரத்தில் 58 மி.மீ. பதிவு

தினத்தந்தி
|
4 Sept 2022 11:59 PM IST

குமரியில் அணைப்பகுதிகளில் கன மழை பெய்தது.

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் அணைப்பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் பேச்சிப்பாறையில் ஒரு மணி நேரத்தில் 58 மி.மீ. பதிவானது.

மழை

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் மலையோர பகுதிகளில் நேற்று மாலையில் கன மழை பெய்தது. இதனால் மாலை 4 மணி முதல் 5 வரையிலான ஒரு மணி நேரத்தில் மட்டும் பேச்சிப்பாறை அணை பகுதியில் 58 மி.மீ. மழை பதிவானதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர். இதனால் இந்த அணைக்கு தண்ணீர் வரத்து அதிக அளவு இருந்தது.

இதே போல் பெருஞ்சாணி அணைப்பகுதியிலும் கன மழை பெய்தது. இதனால் அணையின் நீர்மட்டம் வெள்ள அபாய அளவான 71 அடியை எட்டியுள்ளது.

கண்காணிப்பு

மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் வெள்ள அபாய அளவை கடந்து 44 அடியாக உயர்ந்து வரும் நிலையில், பெருஞ்சாணி அணையின் நீர்மட்டமும் வெள்ள அபாய அளவை எட்டியுள்ளது. இதனால் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகள் ஏற்படாத வகையில் இந்த இரு அணைகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அளவு

நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-

பேச்சிப்பாறை அணை- 29, பெருஞ்சாணி அணை- 58, சிற்றார்-1 அணை -25.4, சிற்றார்-2 அணை -24.8, புத்தன் அணை- 54.8, மாம்பழத்துறையாறு அணை- 21, முக்கடல் அணை- 30.2, பூதப்பாண்டி- 18.6, குழித்துறை- 8.4, நாகர்கோவில்- 4.8, சுருளக்கோடு- 42.8, தக்கலை- 15.1, குளச்சல்- 6, இரணியல்- 9.2, பாலமோர்- 14, கோழிப்போர்விளை- 9.6, அடையாமடை- 9.2, குருந்தங்கோடு- 9.4, முள்ளங்கினாவிளை- 10.4, ஆனைக்கிடங்கு- 19.2 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.

மேலும் செய்திகள்