< Back
மாநில செய்திகள்
கும்பகோணத்தில், 2 மணி நேரம் பலத்த மழை
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

கும்பகோணத்தில், 2 மணி நேரம் பலத்த மழை

தினத்தந்தி
|
6 Jun 2023 3:14 AM IST

கும்பகோணத்தில் 2 மணி நேரம் பெய்த பலத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கும்பகோணம், ஜூன். 6-

கும்பகோணத்தில் 2 மணி நேரம் பெய்த பலத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

பலத்த மழை

கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக கடும் வெயில் வாட்டி வதைத்தது. வெயிலின் கொடுமை காரணமாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வர தயங்கினர். பல்வேறு முக்கிய வேலைகள் காரணமாக பகல் நேரத்தில் வெளியே வந்த பலர் வெயிலின் தாக்கத்தினால் நிழல் இருக்கும் பகுதியை நோக்கி விரைந்தனர்.இந்த நிலையில் நேற்று இரவு எட்டு மணி அளவில் இடியுடன் பெய்ய தொடங்கிய மழை இரவு 10 மணி வரை இடைவிடாது பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. ஒரு சில இடங்களில் மழை தண்ணீர் கழிவு நீருடன் கலந்து தெருக்களில் ஓடியதால் துர்நாற்றம் வீசியது.

மக்கள் அவதி

பல்வேறு வேலைகள் தொடர்பாக கும்பகோணம் நகருக்கு மோட்டார் சைக்கிளில் வந்த நூற்றுக்கணக்கானோர் வேறு வழியில்லாமல் கட்டிடங்களில் ஒதுங்கி நின்றனர். கும்பகோணத்தில் உள்ள ஆயிரக்கணக்கான வியாபார நிறுவனங்களில் பணிபுரியும் ஏராளமான ஆண் பெண்கள் கடும் மழை காரணமாக ஊர் திரும்புவதற்கு மிகவும் சிரமப்பட்டனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்