< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
பட்டுக்கோட்டையில், பலத்த மழை
|19 March 2023 3:37 AM IST
பட்டுக்கோட்டையில் பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
பட்டுக்கோட்டை;
பட்டுக்கோட்டை பகுதியில் கடந்த ஒரு வார காலமாக வெயில் சுட்டெரித்தது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாயினர். கோடை சாகுபடி பயிர்கள் வாடும் நிலை ஏற்பட்டது. இந்தநிலையில் நேற்று மதியம் 12.15 மணியளவில் திடீரென மழை பெய்தது. மதியம் 1 மணி வரை 45 நிமிடம் பட்டுக்கோட்டை நகரிலும் சுற்றுப்புற பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால் கோடை சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனா்.