< Back
மாநில செய்திகள்
வெளுத்து வாங்கும் கனமழை: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இன்று விடுமுறை
மாநில செய்திகள்

வெளுத்து வாங்கும் கனமழை: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இன்று விடுமுறை

தினத்தந்தி
|
4 Dec 2023 9:19 AM IST

தொடர் கனமழை காரணமாக சென்னையின் பல்வேறு சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது.

சென்னை,

சென்னையில் இருந்து 130 கிலோமீட்டர் கிழக்கு தென்கிழக்கு திசையில் வங்கக்கடலில் மிக்ஜம் புயல் மையம் கொண்டுள்ளது. மிக்ஜம் புயல் தற்போது மணிக்கு 14 கிலோமீட்டர் வேகத்தில் வேகமெடுத்து நகர்ந்து வருகிறது.

புயல் காரணமாக சென்னையில் நேற்று மாலை முதல் தற்போது வரை சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக சென்னையின் பல்வேறு சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில், கனமழை காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதிகள் விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிடலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்