< Back
மாநில செய்திகள்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை
மாநில செய்திகள்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை

தினத்தந்தி
|
12 July 2024 9:19 PM IST

தமிழகத்தில் இன்று முதல் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

சென்னை,

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று முதல் 18-ந் தேதி வரை ஒருசில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.எழும்பூர், சென்ட்ரல், நுங்கம்பாக்கம், கிண்டி, கோடம்பாக்கம், திருவொற்றியூர், எண்ணூர், காசிமேடு, பூந்தமல்லி, குரோம்பேட்டை, மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.


மேலும் செய்திகள்