< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை
|29 Nov 2023 7:17 PM IST
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதலே தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
சென்னை,
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதலே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக சென்னையில் முக்கியமான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் இருப்பதால் அலுவலகம் முடிந்து வீடு திரும்புவோர் அவதி அடைந்தனர்.
சென்னையில் ராயபுரம், பழைய வண்ணாரப்பேட்டை, வியசார்பாடி, பெரம்பூர், அம்பத்தூர், கோயம்பேடு உள்ளிட இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னையின் புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், மீனம்பாக்கம், குன்றத்தூர் பூந்தமல்லி, திருவேற்காடு, செம்பரம்பாக்கம், காட்டுப்பாக்கம் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.