< Back
மாநில செய்திகள்
திருவாரூர்
மாநில செய்திகள்
4-வது நாளாக கன மழை
|16 Aug 2023 12:15 AM IST
திருமக்கோட்டை பகுதியில் 4-வது நாளாக கன மழை பெய்தது.
திருமக்கோட்டை:
திருமக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான கோவிந்தநத்தம், சமுதாயம், பாளையக்கோட்டை, வல்லூர், தச்சன்வயல், ராதாநரசிம்மபுரம், ராஜகோபாலபுரம், தென்பரை, எளவனூர், கன்னியாகுறிச்சி ஆகிய பகுதிகளில் 4-வது நாளாக நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. பகல் முழுவதும் வெயில் சுட்டெரித்த நிலையில் மாலையில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.