< Back
மாநில செய்திகள்
சேலத்தில் இரவில் கொட்டித்தீர்த்த மழை- ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மாநில செய்திகள்

சேலத்தில் இரவில் கொட்டித்தீர்த்த மழை- ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தினத்தந்தி
|
7 Nov 2023 4:48 PM IST

தாழ்வான பகுதிகளில் மற்றும் வயல்களில் தண்ணீர் தேங்கி குளம்போல் காட்சி அளித்தது.

சேலம்,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களாக சேலம் மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் தொடர்ந்து இரவில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மேலும் வாழப்பாடி, எடப்பாடி பகுதிகளில் நேற்று இரவில் 3 மணி நேரம் தொடர்ந்து மழை பெய்தது. அதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மற்றும் வயல்களில் தண்ணீர் தேங்கி குளம்போல் காட்சி அளித்தது.

ஏற்காட்டிலும் நேற்று மழை கொட்டியது. இரவிலிருந்து பனி மூட்டம் மற்றும் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகள்