< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
போடியில் விடிய, விடிய பலத்த மழை
|26 Oct 2023 2:45 AM IST
போடியில் விடிய, விடிய பலத்த மழை பெய்தது.
போடியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு மேல் பலத்த மழை பெய்ய தொடங்கியது. அதன்பிறகு விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. விடிய, விடிய இந்த மழை கொட்டித்தீர்த்தது. இதனால் போடி நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது.
சில இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இதேபோல் போடி சுற்றுவட்டார கிராமங்களிலும் பரவலாக மழை பெய்தது. போடியில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 52 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இந்த மழையால் கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. அத்துடன் போடியை அடுத்துள்ள பிள்ளையார் தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.