< Back
மாநில செய்திகள்
ஆரல்வாய்மொழி பகுதியில் பலத்த சூறைகாற்று - காற்றில் பரந்து தகர கொட்டகை...!
மாநில செய்திகள்

ஆரல்வாய்மொழி பகுதியில் பலத்த சூறைகாற்று - காற்றில் பரந்து தகர கொட்டகை...!

தினத்தந்தி
|
4 July 2022 4:33 PM IST

ஆரல்வாய்மொழி பகுதியில் வீசிய பலத்த சூறைகாற்று காரணமாக தகர கொட்டகை சரிந்து விழுந்து உள்ளது.

ஆரல்வாய்மொழி,

ஆனி, ஆடி மாதங்களில் சாரல் மழை வீசுவதும், பலத்த காற்று வீசுவதும் ஆரல்வாய்மொழி, தேவாளை, செண்பகராமன்புதூர் , முப்பந்தல் பகுதிகளில் வழக்கமான நிகழ்வு.

ஆனால் கடந்த சில நாட்களாக சூறைக்காற்றின் வேகம் அதிகமாக உள்ளது. இதனால் பல இடங்களில் மரங்களில் கிளைகள் முறிந்து சாலைகள் விழுந்து கிடக்கின்றனர்.

மேலும் மின்கம்பிகள் அறுந்து விழுவதால் அடிக்கடி மின்தடை ஏற்படுகின்றது. இந்நிலையில் முப்பந்தல் அருகே நாகர்கோவிலை சேர்ந்த ஒருவர் சிப்ஸ் கடை வைப்பதற்காக ரோட்டோரம் தகர கொட்டகை அமைத்திருந்தார்.

இன்று காலையில் அவர் வந்து பார்த்தபோது கொட்டகை சரிந்து கிடக்கிறது. அருகில் உள்ள மின்கம்பியின் மேல் விழுந்ததால் அப்பகுதி முழுவதும் நேற்று இரவிலிருந்து மின்தடை ஏற்பட்டடு உள்ளது.

மேலும் செய்திகள்