< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
பெருங்களூர், கீரனூரில் கடும் பனிமூட்டம்
|30 Dec 2022 12:41 AM IST
பெருங்களூர், கீரனூரில் கடும் பனிமூட்டம் நிலவியது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. நேற்று காலை பெருங்களூரில் தஞ்சை-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான பனி மூட்டம் நிலவியது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படி சென்றன. காலை 9 மணி வரை கடுமையான பனி மூட்டம் நிலவியதால் பெருங்களூர் தேசிய நெடுஞ்சாலை வெறிச்சோடி காணப்பட்டது.
இதேபோல் கீரனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரை கடும் பனிமூட்டம் இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.