< Back
மாநில செய்திகள்
சென்னையில் கடும் பனிமூட்டம் - மக்கள் அவதி!
மாநில செய்திகள்

சென்னையில் கடும் பனிமூட்டம் - மக்கள் அவதி!

தினத்தந்தி
|
12 Feb 2023 7:26 AM IST

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது.

சென்னை,

தமிழ்நாட்டில் மார்கழி மாதம் பொதுவாக பனிமூட்டம் இருப்பது இயல்பான ஒன்று என்றாலும் மார்கழி மாதம் முடிந்து தை மாதம் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடும் பனிமூட்டம் நீடித்து வருகின்றது.

அந்த வகையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. சைதாப்பேட்டை, கிண்டி, மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், அண்ணாசாலை உள்ளிட்ட இடங்களில் அதிகளவில் பனிப்பொழிவு காணப்படுகிறது. கடுமையான பனிமூட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயினர். சாலைகள் சரியாக தெரியாததால் முகப்பு விளக்கை எரியவிட்டபடி வாகனங்கள் மெதுவாக இயக்கப்படுகின்றன.

சென்னையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கடும் குளிர், பனிப்பொழிவு நிலவி வருவதால் பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர். இன்னும் சில நாட்கள் பனிமூட்டம் நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்