கொள்ளிடம் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு... இடுப்பளவு தண்ணீரில் தத்தளிக்கும் மக்கள்
|கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அங்குள்ள பொதுமக்கள் அரசு நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கொள்ளிடம்:
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்து வருவதால் உபரி நீர் கொள்ளிம் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் 2.5 லட்சம் கனஅடி தண்ணீர் வருகிறது.
இதனால் கொள்ளிடம் ஆற்றின் படுகையில் உள்ள நாதல்படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ளமணல், கோரைதிட்டு, மேலவாடி. பாலுரான் படுகை உள்ளிட்ட 6 கிராமங்களில் குடியிருப்புகளை மட்டுமன்றி விளை நிலங்களையும் தண்ணீர் சூழ்ந்ததுள்ளது. மேலும் வெள்ளநீர் படிப்படியாக உயர்ந்து சாலை போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
படுகை கிராமங்களில் வெள்ள நீர் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அப்பகுதி மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு தங்கள் உடமைகள் மற்றும் கால்நடைகளுடன் படகுமூலம் வெளியேறி வருகின்றனர். கிராமத்தை விட்டு வெளியேறி வரும் மக்களுக்கு கொள்ளிடம் ஆற்றங்கரை, அனுமந்தபுரம், ஆச்சாள்புரம், அளக்குடி ஆகிய பகுதிகளில் உள்ள அரசுபள்ளிகளில் தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.