< Back
மாநில செய்திகள்
மெரினாவில் பலமாக வீசிய புழுதி காற்று: வாகன ஓட்டிகள் அவதி
மாநில செய்திகள்

மெரினாவில் பலமாக வீசிய புழுதி காற்று: வாகன ஓட்டிகள் அவதி

தினத்தந்தி
|
3 May 2024 2:08 AM IST

கடும் வெயிலுக்கு மத்தியில் சென்னை மெரினா கடற்கரையையொட்டிய பகுதிகளில் கடல் காற்று பலமாக வீசியது.

சென்னை,

சென்னையில் கோடை வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது. மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த ஆண்டு கோடை காலத்தில் சென்னையில் நேற்று முன்தினம் முதல் முறையாக 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவாகி இருந்தது. அனல் பறந்த வெப்பக் காற்றால் சென்னை வாசிகள் கடும் இன்னலுக்குள்ளாகி வருகிறார்கள்.

வெப்ப காற்றால் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்குவதில் சிரமம் அடைந்து வருகின்றனர். நேற்றும் சென்னையில் வெப்பத்தின் தாக்கத்தை உணர முடிந்தது. வாகன ஓட்டிகளை போன்றே பாதசாரிகளும் வெப்பத்தின் தாக்கத்தால் சிரமப்பட்டனர்.

இதேபோல நேற்று மதியம், கடும் வெயிலுக்கு மத்தியில் சென்னை மெரினா கடற்கரையையொட்டிய பகுதிகளில் கடல் காற்று பலமாக வீசியது. கடல் மணற்பரப்பில் இருந்து புழுதி மணலோடு காற்று வீசியதால், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீதும், நடந்து சென்றவர்கள் மீதும் மணல் விழுந்தது. இதனால், காமராஜர் சாலை மற்றும் மெரினா உட்புற சாலையில் வாகனத்தில் சென்ற வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். இந்த பலத்த காற்றால் வெப்பத்தின் உஷ்ணத்தையும் உணர முடிந்தது.

மேலும் செய்திகள்