< Back
மாநில செய்திகள்
தமிழகத்தில் அடுத்த 2 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

தினத்தந்தி
|
15 July 2023 3:00 PM IST

தமிழகத்தில் அடுத்த 2 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை:

தமிழகத்தில் இரவு நேரங்களில் மழை பெய்தாலும் பகல் நேரங்களில் நிலவும் வெப்ப அலை காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியேற தயங்குகின்றனர். மேலும், வெப்பத்தை தணிக்க மக்கள் இளநீர், தர்பூசணி மற்றும் குளிர்பான கடைகளை நாடிச்செல்வதை காண முடிகிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் வெப்பநிலை 2-4 டிகிரி பாரன்ஹீட் வரை அதிகரிக்க கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் 2 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் எனவும் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளது

மேலும் செய்திகள்