< Back
மாநில செய்திகள்
கரும்பு கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்துள்ள பிரதமர் மோடிக்கு மனமார்ந்த நன்றி - அண்ணாமலை

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

கரும்பு கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்துள்ள பிரதமர் மோடிக்கு மனமார்ந்த நன்றி - அண்ணாமலை

தினத்தந்தி
|
22 Feb 2024 9:19 AM IST

விவசாயிகளின் நலன் காக்கும் உற்ற நண்பனாக நமது மத்திய அரசு விளங்கிக் கொண்டிருப்பதில், மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:-

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், கரும்பு கொள்முதல் விலையை, குவிண்டாலுக்கு ரூ. 315 லிருந்து, ரூ.340 ஆக உயர்த்தி அறிவித்துள்ள பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக கரும்பு விவசாயிகள் சார்பிலும், தமிழக பா.ஜ.க. சார்பிலும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தொடர்ந்து பல நலத்திட்டங்களைச் செயல்படுத்தி, விவசாயிகளின் நலன் காக்கும் உற்ற நண்பனாக நமது மத்திய அரசு விளங்கிக் கொண்டிருப்பதில், மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம்.

தி.மு.க. தனது தேர்தல் வாக்குறுதிகளில், கரும்புக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூ.400 ஆக உயர்த்துவோம் என்று கூறி, ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகியும், இன்னும் நிறைவேற்றாமல் விவசாயிகளை வஞ்சித்துக் கொண்டிருக்கிறது. உடனடியாக, தி.மு.க. விவசாயிகளுக்குக் கொடுத்த தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.


மேலும் செய்திகள்