< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஜார்கண்ட் மாநில கவர்னராக நியமிக்கப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
|12 Feb 2023 11:43 AM IST
ஜார்கண்ட் மாநில கவர்னராக நியமிக்கப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.
சென்னை,
இந்தியா முழுவதிலும் 13 மாநிலங்களுக்கு புதிய கவர்னரகளை நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவு பிறப்பித்தார். அதில்
தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த பாஜக நிர்வாகி சி.பி.ராதாகிருஷ்ணனை ஜார்கண்ட் மாநில கவர்னராக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில் ஜார்கண்ட் மாநில கவர்னராக நியமிக்கப்பட்ட சி.பி.ராதகிருஷ்ணனுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,
ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நண்பர் சி.பி.ராதாகிருஷ்ணன்அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! அரசியலமைப்புச் சட்டத்தின்படி தனது கடமைகளை நிறைவேற்றி தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்திட விழைகிறேன்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.