< Back
மாநில செய்திகள்
நிலுவையில் உள்ள 2-ம் மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை
கரூர்
மாநில செய்திகள்

நிலுவையில் உள்ள 2-ம் மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை

தினத்தந்தி
|
1 Sept 2023 12:03 AM IST

நிலுவையில் உள்ள 2-ம் மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை நடந்தது.

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று 2-வது நாளாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்படி கரூர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள இரண்டாம் மேல்முறையீட்டு மனுக்களின் மீது தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் தனசேகரன் விசாரணை மேற்கொண்டார். அப்போது கரூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை மற்றும் வருவாய்த்துறை சார்ந்த நிலுவையில் உள்ள 28 இரண்டாம் மேல்முறையீட்டு மனுக்களுக்கு தொடர்புடைய மனுதாரர்கள் மற்றும் தொடர்புடைய பொதுத்தகவல் அலுவலர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.

மேலும் செய்திகள்