< Back
மாநில செய்திகள்
மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்  மாற்றம்-  புதிய செயலராக  செந்தில்குமார் ஐ.ஏ.எஸ் நியமனம்
மாநில செய்திகள்

மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மாற்றம்- புதிய செயலராக செந்தில்குமார் ஐ.ஏ.எஸ் நியமனம்

தினத்தந்தி
|
12 Jun 2022 4:00 PM IST

மருத்துவத்துறையின் முதன்மை செயலராக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத்துறையின் புதிய செயலராக கு. செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உள்துறை செயலராக இருந்த எஸ்.கே பிரபாகர் மாற்றப்பட்டு பணீந்திர ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்துறை முதன்மைச் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வணிகவரித்துறை முதன்மைச் செயலாளராக தீரஜ்குமர் நியமிக்கப்பட்டுள்ளார். வருவய் நிர்வாக ஆணையராக அல்லது கூடுதல் தலைமைச் செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்