< Back
மாநில செய்திகள்
சுகாதார சீர்கேடு
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

சுகாதார சீர்கேடு

தினத்தந்தி
|
23 May 2022 2:10 AM IST

சுகாதார சீர்கேடு

சுகாதார சீர்கேடு

தஞ்சை புன்னைநல்லூர்‌ மாரியம்மன் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கோவில் வளாகம் மற்றும் தெப்பக்குளம் பகுதியில் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் குவிந்து கிடக்கும் குப்பைகளில் இரை தேடி கால்நடைகள் அதிகளவில் வருகின்றன. அதுமட்டுமின்றி தேங்கி கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கோவில் வளாகத்தில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து செல்லவும், குப்பைகளை அகற்றவும் நடவடிக்கை எடுப்பார்களா? -பொதுமக்கள், தஞ்சை.

மேலும் செய்திகள்