< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
செம்பட்டி பஸ் நிலையத்தில் காட்சிப்பொருளான சுகாதார வளாகம்
|27 Jan 2023 9:36 PM IST
செம்பட்டி பஸ் நிலையத்தில் காட்சிப்பொருளான சுகாதார வளாகத்தை திறக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செம்பட்டி பஸ் நிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொது சுகாதார வளாகம் புதிதாக கட்டப்பட்டது. இதையடுத்து கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அந்த சுகாதார வளாகம் திறக்கப்பட்டது. பச்சமலையான்கோட்டை ஊராட்சி நிர்வாகம் சார்பில் சுகாதார வளாகத்தை பராமரித்து கட்டண வசூல் செய்யப்பட்டது. ஆனால் சில காரணங்களால் அந்த சுகாதார வளாகம் கடந்த ஒரு வாரமாக பூட்டிக்கிடக்கிறது.
இதனால் செம்பட்டி பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் மற்றும் செம்பட்டி வழியாக பழனிக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் சுகாதார வளாகத்தை பயன்படுத்த முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். எனவே செம்பட்டி பஸ் நிலையத்தில் காட்சிப்பொருளாக உள்ள சுகாதார வளாகத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பயணிகள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.