< Back
மாநில செய்திகள்
கும்பகோணத்தில், 3 நகர்ப்புற நல வாழ்வு மையங்கள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

கும்பகோணத்தில், 3 நகர்ப்புற நல வாழ்வு மையங்கள்

தினத்தந்தி
|
7 Jun 2023 2:04 AM IST

கும்பகோணத்தில், 3 நகர்ப்புற நல வாழ்வு மையங்களை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்

கும்பகோணம்;

கும்பகோணத்தில், 3 நகர்ப்புற நல வாழ்வு மையங்களை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்

நகர்ப்புற நல வாழ்வு மையங்கள்

கும்பகோணம் திருநாராயணபுரம், காசிராமன் தெரு, பேட்டைத்தெரு ஆகிய 3 இடங்களில் ரூ.75 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட நகர்ப்புற நல வாழ்வு மையங்களை காணொலிக்காட்சி மூலம் நேற்று சென்னையிலிருந்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.இதையொட்டி கும்பகோணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்யாணசுந்தரம் எம்.பி, அன்பழகன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் சு.ப.தமிழழகன், ஆணையர் லெட்சுமணன், மாநகர நல அலுவலர் பிரேமா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வீடுகள் தோறும் சென்று...

புதிதாக திறக்கப்பட்டுள்ள நகர்ப்புற நல வாழ்வு மையங்களில் நாள்தோறும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையில் 1 மருத்துவர், 1 செவிலியர், 1 சுகாதார ஆய்வாளர், 1 உதவியாளர்கள் பணியில் இருப்பார்கள். மேலும், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், வீடுகள் தோறும் சென்று நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்