< Back
மாநில செய்திகள்
சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு முகாம்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு முகாம்

தினத்தந்தி
|
8 May 2023 6:45 PM GMT

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்படவுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களிலும் குடிநீர், சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது.

கடந்த 1-ந் தேதி சிறுபாக்கம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தூய்மை உறுதி மொழி ஏற்றுக்கொண்டது படி வருகிற 13.5.2023 தேதி வரை பொது நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் தூய்மைக்காவலர்கள், துப்புரவு பணியாளர்கள், நேரு யுவகேந்திரா அமைப்பு ஆகியோர் மூலம் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும் 13- ந் தேதி வரை துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள், பள்ளிகள், பொது நிறுவனங்களில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துடன் இணைந்து சுத்தமான மற்றும் பசுமையான கிராமங்களை ஊக்குவிக்கபட உள்ளது. இது தவிர வருகிற 15-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை குடிநீர், சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு முகாம் ஊரக பகுதிகளில் சுய உதவிக்குழு உறுப்பினர்களை கொண்டு விழிப்புணர்வு நடத்தப்படவுள்ளது. வருகிற 29-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஜூன்) 3-ந்தேதி வரை ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்து, அதற்கு பதில் தீங்கு விளைவிக்காத மாற்று பொருட்களை பயன்படுத்துதல் குறித்தும், 5.6.2023 முதல் 15.6.2023 வரை தண்ணீர், சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை குறித்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்