5-ம் வகுப்பு மாணவிக்கு ஆபாச வீடியோ காட்டிய தலைமை ஆசிரியர் - கோவையில் பரபரப்பு
|5-ம் வகுப்பு மாணவிக்கு ஆபாச வீடியோ காட்டிய தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கோவை,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிவன்புரம் பகுதியை சேர்ந்தவர் பிராங்கிளின் (வயது 44). இவர் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இவர் கடந்த மாதம் 20-ந் தேதி அந்த பள்ளியில் படிக்கும் 5-ம் வகுப்பு மாணவி ஒருவரிடம் செல்போனில் ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை காட்டி பேசியதாக தெரிகிறது. இதனால் அந்த மாணவி அதிர்ச்சி அடைந்தார். அவர், பள்ளியில் நடந்த சம்பவம் பற்றி தனது பெற்றோரிடம் கூறினார்.
அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் தலைமை ஆசிரியர் பிராங்கிளின் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதையடுத்து பிராங்கிளின் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
5-ம் வகுப்பு மாணவிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஆபாச வீடியோ காட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.