< Back
தமிழக செய்திகள்
லாரி-சரக்கு வேன் நேருக்கு நேர் மோதல் - டிரைவர், கிளீனர் பலி
தமிழக செய்திகள்

லாரி-சரக்கு வேன் நேருக்கு நேர் மோதல் - டிரைவர், கிளீனர் பலி

தினத்தந்தி
|
18 Jun 2022 9:02 AM IST

அம்மாப்பேட்டை அருகே லாரி-சரக்கு வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

அம்மாப்பேட்டை,

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே கோம்பூர் பகுதியில் உடுமலைப்பேட்டையில் இருந்து தேங்காய் லோடு ஏற்றிக்கொண்டு பெங்களூருக்கு சரக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

இந்த லாரி மீது, ஆந்திர மாநிலத்தில் இருந்து கேரளாவை நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு வேன் இன்று அதிகாலை 2 மணியளவில் நேருக்கு நேர் மோதியது.

இதில் சரக்கு வேனின் டிரைவர் ஹரீஷ்குமார்(வயது28) கிளீனர் மஞ்சுநாத்(30)ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

இது குறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த அம்மாப்பேட்டை போலீசார் உயிரிழந்த இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே காயமடைந்த தேங்காய் பாரம் ஏற்றி வந்த லாரி டிரைவர் கருணாகரன்(32) பவானி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இந்த விபத்து குறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்