< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
தலைமை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
|10 Oct 2023 3:41 AM IST
தஞ்சையில் தலைமை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்
தஞ்சாவூர்;
தஞ்சைமாவட்ட தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் வடிவேல் தலைமை தாங்கினார். . ஆர்ப்பாட்டத்தில் மாநில பிரசார செயலாளர் ரமேஷ்குமார், மண்டல செயலாளர் மணியரசன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறுவதில் உள்ள முரண்பாடுகளை களையக்கோரி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் தட்சிணாமூர்த்தி நன்றி கூறினார்.