< Back
மாநில செய்திகள்
விரைவில் ஓபிஎஸ் சிறைக்கு செல்வார் - கோவையில்  எடப்பாடி பழனிசாமி பேட்டி
மாநில செய்திகள்

விரைவில் ஓபிஎஸ் சிறைக்கு செல்வார் - கோவையில் எடப்பாடி பழனிசாமி பேட்டி

தினத்தந்தி
|
27 Dec 2023 3:04 PM IST

மத்திய, மாநில அரசுகள் ஒருவரை ஒருவர் குறைசொல்வதை விட்டுவிட்டு மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.

கோவை,

கோவையில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

தென்மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் முன்பே கணித்துச் சொன்னது. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் பாதிப்பை தவிர்த்திருக்கலாம். கால்வாய்களை முன்பே தூர்வாரி மோட்டார்களை தயாராக வைத்திருக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாநில அரசு முதலில் மாநில பேரிடர் நிவாரண நிதியின் மூலம் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மத்திய அரசு நிதி கொடுக்க தவறிவிட்டது.மத்திய, மாநில அரசுகள் ஒருவரை ஒருவர் குறைசொல்வதை விட்டுவிட்டு மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.தேர்தல் கூட்டணி அரசியல் சூழல்களுக்கு ஏற்ப முடிவு செய்யப்படும்.

ஓபிஎஸ் மீதான வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது, அதில் அவருக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும். விரைவில் ஓபிஎஸ் சிறைக்கு செல்வார். ஜெயலலிதாவிற்கு ரூ.2 கோடி கடன் கொடுத்ததாக ஓபிஎஸ் சொன்னது மோசமான வார்த்தை. இவ்வாறு அவர் கூறினார்.

சில ரகசியங்களை வெளியிட்டால், எடப்பாடி பழனிசாமி சிறை செல்ல நேரிடும் என ஓபிஎஸ் தெரிவித்திருந்த நிலையில் ஈபிஎஸ் பதிலடி கொடுத்துள்ளார்.


மேலும் செய்திகள்