< Back
மாநில செய்திகள்
சாலையில் நடந்து சென்றவர்  மயங்கி விழுந்து சாவு
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

சாலையில் நடந்து சென்றவர் மயங்கி விழுந்து சாவு

தினத்தந்தி
|
28 July 2022 10:58 PM IST

கன்னியாகுமரியில் சாலையில் நடந்து சென்றவர் மயங்கி விழுந்து சாவு

கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பில் நேற்று காலையில் ஒருவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது அவர் திடீரென்று மயங்கி விழுந்தார்.

உடனே அங்கு நின்ற ஆட்டோ டிரைவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டார். இதுபற்றி கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர்கள் விரைந்து வந்து உடலை கைப்பற்றி அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் நாகர்கோவில் கே.பி.ரோடு பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (வயது 40) என்று தெரிய வந்தது. அதைத்தொடரந்து உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

---

மேலும் செய்திகள்