< Back
மாநில செய்திகள்
தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த பிரபல நடிகரின் மகன்
மாநில செய்திகள்

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த பிரபல நடிகரின் மகன்

தினத்தந்தி
|
12 March 2024 8:43 PM IST

தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் சேர்க்கை சமீபத்தில் தொடங்கியது

சென்னை,

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி, தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இதையடுத்து, கட்சியின் சின்னம், கொடி உள்ளிட்டவை தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் அடிக்கடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை சமீபத்தில் தொடங்கியது. தமிழகம் முழுவதும் 2 கோடி உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் சேருவதற்கான உறுப்பினர் சேர்க்கை செயலியை அறிமுகம் செய்த நடிகர் விஜய், கட்சியின் முதல் நபராக சேர்ந்தார். மேலும், விருப்பப்படுவர்கள் அனைவரும் கட்சியில் இணையுமாறும் வீடியோ வாயிலாக விஜய் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த நிலையில் நடிகர் நாசரின் மகன் நூருல் ஹுசைன் பைசல் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளார். தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலியில் விவரங்களை பதிவு செய்து அவர் கட்சியில் இணைந்துள்ளார்.

மேலும் செய்திகள்