< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
'அவருக்கு நிறைய நேரம் இருக்கிறது, கனவு காணட்டும்' - எச்.ராஜா கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதிலடி
|13 July 2023 7:56 PM IST
டுவிட்டரில் எச்.ராஜா பதிவிட்ட கருத்து தொடர்பாக கனிமொழி எம்.பி. பதிலளித்துள்ளார்.
தூத்துக்குடி,
கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி சென்று திரும்பிய நிலையில், பா.ஜ.க.வைச் சேர்ந்த எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்த பதிவில், தி.மு.க. அரசு இன்னும் 48 மணி நேரத்தில் ஆட்டம் காணும் என்று பதிவிட்டிருந்தார்.
அவரது கருத்துக்கு தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் டுவிட்டரில் பதில் கருத்து பதிவிட்டு வந்த நிலையில், இது தொடர்பாக இன்று தூத்துக்குடியில் தி.மு.க. எம்.பி. கனிமொழியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், "அவருக்கு நிறைய நேரம் இருக்கிறது, கனவுகள் காணட்டும். நாம் என்ன செய்ய முடியும்?" என்று தெரிவித்தார்.