< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்
வைக்கோல் ஏற்றி சென்ற லாரியில் தீ
|4 Oct 2023 12:15 AM IST
வைக்கோல் ஏற்றி சென்ற லாரியில் தீப்பிடித்தது.
தொண்டி,
திருவாடானை அருகே உள்ள மாவூர் பகுதியில் இருந்து வைக்கோல் பாரம் ஏற்றிக்கொண்டு மினி லாரி சென்றது. அப்போது சாலையின் குறுக்கே சென்ற மின் கம்பியில் வைக்கோல் உரசியதில் திடீரென தீப்பற்றியது. உடனே டிரைவர் மினி லாரியை தொண்டி-மதுரை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் நிறுத்திவிட்டு உடனடியாக இறங்கினார். பின்னர் வைக்கோலில் தீ மளமளவென பற்றியது. இதுகுறித்து அறிந்த திருவாடனை, தொண்டி தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் மினிலாரி முற்றிலும் தீயில் எரிந்து சேதம் அடைந்தது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இறித்து திருவாடானை, தொண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.