< Back
மாநில செய்திகள்
வைக்கோல் கட்டுகள் தீயில் எரிந்து நாசம்
அரியலூர்
மாநில செய்திகள்

வைக்கோல் கட்டுகள் தீயில் எரிந்து நாசம்

தினத்தந்தி
|
22 Feb 2023 11:52 PM IST

வைக்கோல் கட்டுகள் தீயில் எரிந்து நாசமானது.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்த தத்தனூர் கீழவெளி கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் சங்கர். விவசாயியான இவர் கும்பகோணத்தில் இருந்து தத்தனூர் கீழவெளி கிராமத்திற்கு டிராக்டர் மூலம் வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு நேற்று வந்துள்ளார். அதே ஊரைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் பழனிச்சாமி(வயது24) என்பவர் டிராக்டரை ஓட்டிவந்துள்ளார். அப்போது அழிசுகுடி கிராமம் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக டிராக்டர் ஏற்றி வந்த வைக்கோல் கட்டுகள் சாலையின் குறுக்காக சென்ற மின்சார கம்பியின் மீது உரசியது. இதில் ஏற்பட்ட தீப்பொறி வைக்கோல் கட்டுகள் மீது விழுந்துள்ளது. தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிந்து வைக்கோல் முற்றிலும் சாம்பலானது. வைக்கோல் தீப்பிடித்து எரிவதை கண்ட டிரைவர் வைக்கோல் கட்டுகளை சாலையில் தள்ளிவிட்டு டிராக்டரை தனியாக அப்புறப்படுத்தினார். இதில் சாலையில் கொட்டப்பட்ட அனைத்து வைக்கோல் கட்டுகளும் முற்றிலும் எரிந்து சாம்பலானது. ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள வைக்கோல் மற்றும் டிராக்டர் உதிரி பாகங்கள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தா.பழூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்