< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தமிழக மகிளா காங்கிரஸ் தலைவராக ஹசீனா சையத் நியமனம்
|21 April 2024 1:36 AM IST
இதற்கான அறிவிப்பை, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் நேற்று வெளியிட்டார்.
சென்னை,
தமிழக மகிளா காங்கிரஸ் தலைவராக வக்கீல் சுதா பதவி வகித்தார். அவர், நாடாளுமன்ற தேர்தலில் மயிலாடுதுறை வேட்பாளராக களமிறக்கப்பட்டார். இந்த நிலையில், தமிழக மகிளா காங்கிரஸ் புதிய தலைவராக ஹசீனா சையத் நியமிக்கப்பட்டார்.
இதற்கான அறிவிப்பை, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் நேற்று வெளியிட்டார். ஹசீனா சையத், மகிளா காங்கிரஸ் தேசிய செயலாளராக பதவி வகித்து வந்தார். டி.வி விவாத நிகழ்ச்சிகளிலும் காங்கிரஸ் சார்பில் பங்கேற்று கருத்துகளை முன்வைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது