மயிலாடுதுறை
அறுவடை எந்திர உரிமையாளர்கள் வாங்கினால் புகார் தெரிவிக்கலாம்
|நிர்ணயம் செய்யப்பட்ட தொகைக்கு கூடுதலாக அறுவடை எந்திர உரிமையாளர்கள் வாங்கினால் புகார் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் லலிதா தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நிர்ணயம் செய்யப்பட்ட தொகைக்கு கூடுதலாக அறுவடை எந்திர உரிமையாளர்கள் வாங்கினால் புகார் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் லலிதா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முத்தரப்பு கூட்டம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் அறுவடை எந்திரங்களுக்கான வாடகையினை முறைப்படுத்தப்பட வேண்டும் என்று தொடர்ந்து விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அதன்பேரில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், வேளாண் சார்ந்த அலுவலர்கள், தனியார் அறுவடை எந்திரங்களின் உரிமையாளர்கள் மற்றும் முகவர்கள் ஒருங்கிணைந்த முத்தரப்பு கூட்டம் நடத்தி விவாதிக்கப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் குறித்து விவாதித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி பெல்ட் டைப் அறுவடை எந்திரங்களுக்கான வாடகை ஒரு மணி நேரத்திற்கு ரூ.2 ஆயிரத்து 450 எனவும், டயர் டைப் அறுவடை எந்திரங்களுக்கான வாடகை ஒரு மணி நேரத்திற்கு ரூ.ஆயிரத்து 750 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புகார் தெரிவிக்கலாம்
எனவே நிர்ணயம் செய்யப்பட்ட வாடகைத்தொகைக்கு மிகாமல் விவசாயிகளிடமிருந்து வசூல் செய்து தனியார் அறுவடை எந்திர உரிமையாளர்கள் எந்திரங்களை பணியில் ஈடுபடுத்தி ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும் நிர்ணயம் செய்யப்பட்ட தொகைக்கு கூடுதலாக அறுவடை எந்திர உரிமையாளர்கள் கோரினால் தாசில்தார், வேளாண் மற்றும் வேளாண்மைப்பொறியியல் துறை அலுவலர்களுக்கு புகார் தெரிவிக்கலாம்.
மேலும் வேளாண்மைப்பொறியியல் துறை அறுவடை எந்திரங்களுக்கு பெல்ட் டைப் அறுவடை எந்திரங்களுக்கான வாடகை ஒரு மணி நேரத்திற்கு ரூ.ஆயிரத்து 880 எனவும், டயர் டைப் அறுவடை எந்திரங்களுக்கான வாடகை ஒரு மணி நேரத்திற்கு ரூ.ஆயிரத்து 160 எனவும் அரசால் நிர்ணயம் செய்து உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.